Arasanai Kaanamaliruppomo Namadhu lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

arasanaik kaanamaliruppomo? – namathu

aayulai veennaakak kalippomo?

anupallavi

paramparai njaanaththaip palippomo? – yoothar

paadanu pavangalai olippomo? – yootha

saranangal

1. yaakkopilor velli uthikkumente, – israel

raaja senga?lengum kathikkumente,

aakkamilanthu maruvaakkuraiththa paalaam

theerkkan molipoyyaatha paakkiyamae! – yootha — arasanai

2. thaeso mayaththaarakai thontuthu paar! – maerkuth

thisai vali kaattimun selluthu paar!

poosanaik kaana nankotaikal konntae -avar

ponnati vananguvom, nadavuminte! – yootha — arasanai

3. alangaaramanai yontu thonuthu paar! – athan

alaku manamung kannnum kavarnthathu paar!

ilavara sangirukkum nichchayam paar! – naam

eduththa karumam siththiyaakidum paar! – yootha — arasanai

4. aramanaiyil avaraik kaannomae! – athai

akantu thenmaarkkamaayth thirumpuvamae!

maraintha udu atho! paar thirumpinathae, – pethlaem

vaasalil namaik konndu serkkuthu paar! – yootha — arasanai

5. pon thoopavarkkam vellaip polamittae, – raayar

porkalal archchanai purivomae!

vankannnan aerothaip paaraamal, – thaeva

vaakkinaal thirumpinom soraamal, – yootha — arasanai

This song has been viewed 130 times.
Song added on : 5/15/2021

அரசனைக் காணமலிருப்போமோ? நமது

அரசனைக் காணமலிருப்போமோ? – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

அனுபல்லவி

பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத

சரணங்கள்

1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத — அரசனை

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத — அரசனை

4. அரமனையில் அவரைக் காணோமே! – அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, – பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! – யூத — அரசனை

5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, – ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், – தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், – யூத — அரசனை



An unhandled error has occurred. Reload 🗙