Enakkaga Iraiva Enakkaga lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

enakkaaka iraivaa enakkaaka

idarpada vantheer enakkaaka

1. palikalai sumaththi parikasiththaar – uyir

pariththida ennnnith theerppaliththaar –enakkaaka iraivaa

2. thaalaach siluvai sumakka vaiththaar – ummai

maalaath thuyaraal thutikka vaiththaar –enakkaaka iraivaa

3. viluntheer siluvaip paluvodu – meenndum

eluntheer thuyarkalin ninaivodu –enakkaaka iraivaa

4. thaangida vonnnnaath thuyarutte – ummaith

thaangiya annai thuyarutta?l –enakkaaka iraivaa

5. maruththida mutiyaa nilaiyaalae – seemon

varuththinaar thannai ummodu –enakkaaka iraivaa

6. nilaiyaay pathinthathu um vathanam – anpin

vilaiyaay maathin sitru thunniyil –enakkaaka iraivaa

7. oyntheer paluvinaich sumanthathanaal – antho

saayntheer nilaththil marumuraiyum –enakkaaka iraivaa

8. vilineer perukkiya makalirukku – anpu

molineer nalki vali thodarntheer –enakkaaka iraivaa

9. moontam muraiyaay neer viluntheer – kaal

oonti nadanthidum nilai thalarntheer –enakkaaka iraivaa

10. utaikal kalainthida ummaith thantheer – iraththa

mataikal thiranthida mey nontheer –enakkaaka iraivaa

11. pongiya utharam vatinthidavae – ummaith

thongidach seythaar siluvaiyilae –enakkaaka iraivaa

12. innuyir akantathu umai vittu – poomi

irulil aalnthathu oli kettu –enakkaaka iraivaa

13. thuyaruttuth thutiththaal ulam nonthu – annai

uyiratta udalin matisumanthu –enakkaaka iraivaa

14. odungiya umathudal pothiyappattu – neer

adangiya kallarai umathantu –enakkaaka iraivaa

This song has been viewed 154 times.
Song added on : 5/15/2021

எனக்காக இறைவா எனக்காக

எனக்காக இறைவா எனக்காக

இடர்பட வந்தீர் எனக்காக

1. பழிகளை சுமத்தி பரிகசித்தார் – உயிர்

பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார் –எனக்காக இறைவா

2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் – உம்மை

மாளாத் துயரால் துடிக்க வைத்தார் –எனக்காக இறைவா

3. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு – மீண்டும்

எழுந்தீர் துயர்களின் நினைவோடு –எனக்காக இறைவா

4. தாங்கிட வொண்ணாத் துயருற்றே – உம்மைத்

தாங்கிய அன்னை துயருற்றாள் –எனக்காக இறைவா

5. மறுத்திட முடியா நிலையாலே – சீமோன்

வருத்தினார் தன்னை உம்மோடு –எனக்காக இறைவா

6. நிலையாய் பதிந்தது உம் வதனம் – அன்பின்

விலையாய் மாதின் சிறு துணியில் –எனக்காக இறைவா

7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் – அந்தோ

சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும் –எனக்காக இறைவா

8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு – அன்பு

மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர் –எனக்காக இறைவா

9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் – கால்

ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர் –எனக்காக இறைவா

10. உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் – இரத்த

மடைகள் திறந்திட மெய் நொந்தீர் –எனக்காக இறைவா

11. பொங்கிய உதரம் வடிந்திடவே – உம்மைத்

தொங்கிடச் செய்தார் சிலுவையிலே –எனக்காக இறைவா

12. இன்னுயிர் அகன்றது உமை விட்டு – பூமி

இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு –எனக்காக இறைவா

13. துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து – அன்னை

உயிரற்ற உடலின் மடிசுமந்து –எனக்காக இறைவா

14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு – நீர்

அடங்கிய கல்லறை உமதன்று –எனக்காக இறைவா



An unhandled error has occurred. Reload 🗙