Engum Pukal Yesu Iraajanukkae lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

engum pukal Yesu iraajanukkae
elil maatchimai valar vaaliparae!
ungalaiyallavae? unnmai vaethangaakkum
uyar vararenap pakthar othukiraar -

1. aayirath the?ruvar aavarallae? narum
athai arinthu thuthi seykuvar
thaayinum madangu satham anputaiya
saami Yesuvukkithayam thanthiduvar - engum

2. kalvi kattavarkal kalvi kallaathae?rkkuk
kadan pattavar kann thirakkavae
palvali alaiyum paathaithappinae?raip
parinthu thiruppa nitham paarththiduvar- engum

3. thaalmai sarkunam thayai kaarunnyamum
thalaippathallae? thakuntha kalvi?
paalunthurkkunamum paavach seykaiyaavum
paranthae?dap paarppathungal paaramante??- engum

4. suththa suvisem thurithamaaych sella
thuthar nangalae thuyan vararae
karththarin paathaththil kaalai maalai thangik
karunnai nirai vasanam kattiduvar- engum

This song has been viewed 107 times.
Song added on : 5/15/2021

எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே

எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
உங்களையல்லவோ உண்மை வேதங்காக்கும்
உயர் வரரெனப் பக்தர் ஓதுகிறார் –

1. ஆயிரத் தொருவர் ஆவரல்லோ நரும்
அதை அறிந்து துதி செய்குவர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவர் – எங்கும்

2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
கடன் பட்டவர் கண் திறக்கவே
பல்வழி அலையும் பாதைதப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவர்- எங்கும்

3. தாழ்மை சற்குணம் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?- எங்கும்

4. சுத்த சுவிசேம் துரிதமாய்ச் செல்ல
துதர் நங்களே துயன் வரரே
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக்
கருணை நிறை வசனம் கற்றிடுவர்- எங்கும்



An unhandled error has occurred. Reload 🗙