Aananthamaaka Anparaip Paaduvaen lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

1. aananthamaaka anparaip paaduvaen
aasaiyava rennaaththu maavirkae
aasikalarulum aananthananthamaay
aanndavar Yesu pol aarumillaiyae

Yesuvallaal Yesuvallaal
inpam ikaththil vaetru engumillaiyae
Yesuvallaal Yesuvallaal
inpam vaetru engumillaiyae

2. thanthai thaaymun sonthamaanorkalum
thallitinum naan thalliduvaeno
thaangiduvaenaen neethiyin karaththaal
thaaparamum nalla naathanumentar — Yesu

3. kiristhu Yesu pirasannamaakavae
kirupaiyum veliyaakinathae
neekkiyae saavinai narsuviseshaththaal
jeevan aliyaamai veliyaakkinaar — Yesu

4. oppillaatha nampikkai santhoshamum
thappatru thaesin kireedamaakavae
apposthalar tham ooliyaththaalae
aathi visvaasaththil valarnthiduvom — Yesu

5. alukaiyin thaalvil nadappavarae
aalipol vaanmalai niraikkumae
sernthida seeyonil thaevanin sannithi
jeyaththin mael jeyamatainthiduvom — Yesu

This song has been viewed 63 times.
Song added on : 5/15/2021

ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

1. ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவ ரென்னாத்து மாவிற்கே
ஆசிகளருளும் ஆனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசு போல் ஆருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறு எங்குமில்லையே

2. தந்தை தாய்முன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனேன் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார் — இயேசு

3. கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார் — இயேசு

4. ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
தப்பறு தேசின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விஸ்வாசத்தில் வளர்ந்திடுவோம் — இயேசு

5. அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின் மேல் ஜெயமடைந்திடுவோம் — இயேசு



An unhandled error has occurred. Reload 🗙