Ithu Athisayame Enakaananthame lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

ithu athisayamae enakkaananthamae
inpa paralokam thuranthenakkaay
ikaththil Yesu manuvaay uthiththaar

vinnnnaiyum thuranthu immannnulakil
ennaiyum ennnnilae tham manathil
thaalmaiyin roopamae thaam eduththu
thayaaparanaayth thontinaar – thaeva

maanidar mana irul neekkidum mey
maa pirapaiyotilangum makipan
mannuyir meetkavae thannuyiraith
thanthaarae Yesuvaiyae -enthan

samaathaana pirapuvaay jekaththil vanthae
samaathaanam enathullamae polinthaar
nantiyotae naanum paadiduvaen
tharparan Yesuvaiyae enthan

paraththidum paravaikkum koodu unntae
pathungida narikkum or kuliyumunntae
Yesuvukko thalai saayththidavo
engumor sthalamumillai – poovil

saanthamum thaalmaiyum neethiyumae
sirappudan vilangiduthae avaril
innukamae enakkennaalumae
sontha mentettiduvaen entum

This song has been viewed 76 times.
Song added on : 5/15/2021

இது அதிசயமே எனக்கானந்தமே

இது அதிசயமே எனக்கானந்தமே
இன்ப பரலோகம் துறந்தெனக்காய்
இகத்தில் இயேசு மனுவாய் உதித்தார்

விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்
என்னையும் எண்ணிலே தம் மனதில்
தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து
தயாபரனாய்த் தோன்றினார் – தேவ

மானிடர் மன இருள் நீக்கிடும் மெய்
மா பிரபையோடிலங்கும் மகிபன்
மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்
தந்தாரே இயேசுவையே -எந்தன்

சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே
சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்
நன்றியோடே நானும் பாடிடுவேன்
தற்பரன் இயேசுவையே எந்தன்

பறத்திடும் பறவைக்கும் கூடு உண்டே
பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே
இயேசுவுக்கோ தலை சாய்த்திடவோ
எங்குமோர் ஸ்தலமுமில்லை – பூவில்

சாந்தமும் தாழ்மையும் நீதியுமே
சிறப்புடன் விளங்கிடுதே அவரில்
இந்நுகமே எனக்கெந்நாளுமே
சொந்த மென்றேற்றிடுவேன் என்றும்



An unhandled error has occurred. Reload 🗙