En Vaalvil Yesuvae lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

en vaalvil Yesuvae ennaalum ingae
ellaamum neeyaaka vaenndum
enthan ellaamum neeyaaka vaenndum

sokangal aaraamal naan vaadum pothu
thaayaaka nee maara vaenndum
anputh thaayaaka nee maara vaenndum

1. paarangal thaangaamal saaykinta pothu
paathangal neeyaaka vaenndum – enthan
paavangal kadalaaki naan moolkum pothu
odangal neeyaaka vaenndum – varum — en

2. poraattam soolnthennai theevaakkumpothu
paalangal neeyaaka vaenndum – innai
theeraatha aarvaththil naan thaetip payilum
paadangal neeyaaka vaenndum – marai — en

3. kaalangal ellaamum en nenja veettil
theepangal neeyaaka vaenndum – sudar
thaakangal theeraamal naan aengum pothu
maekangal neeyaaka vaenndum – malai — en

This song has been viewed 78 times.
Song added on : 5/15/2021

என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே

என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத் தாயாக நீ மாற வேண்டும்

1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது
பாதங்கள் நீயாக வேண்டும் – எந்தன்
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது
ஓடங்கள் நீயாக வேண்டும் – வரும் — என்

2. போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும்போது
பாலங்கள் நீயாக வேண்டும் – இணை
தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்
பாடங்கள் நீயாக வேண்டும் – மறை — என்

3. காலங்கள் எல்லாமும் என் நெஞ்ச வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும் – சுடர்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது
மேகங்கள் நீயாக வேண்டும் – மழை — என்



An unhandled error has occurred. Reload 🗙